நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

cibil score குறைவால் நிறுத்தப்பட்ட திருமணம்

புது டெல்லி: 

மகாராஷ்டிர மாநிலம் முர்திசாபூரில் வங்கி மதிப்பீட்டு எண்ணான cibil score மாப்பிள்ளைக்கு குறைவாக இருப்பதாக கூறி பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தி உள்ளனர்.

பொதுவாக ஜாதகப் பொருத்தம், அந்தஸ்து, நிரந்தர வேலையை பார்த்து பெரும்பாலான திருமணங்கள்  நிச்சயிக்கப்பட்டு வந்துநிலையில், தற்போது வங்கிக் கடன் பின்னணியையும் ஆராய ஆரம்பிக்கப்பட்டுள்ளது மணமகன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்களில் இருந்து மாப்பிள்ளை கடன் வாங்கி அதை முறையாக திருப்பிச் செலுத்தாததால் அவரது சிபில் ஸ்கோர் குறைவாக இருந்துள்ளதை மணப்பெண்ணின் தாய் மாமன் கண்டுபிடித்துள்ளார்.

கடனில் உள்ளவருக்கு எப்படி பெண்ணை தர முடியும் என தாய்மாமன் கேள்வி எழுப்பி திருமணப் பேச்சுவாத்தையை மணமகள் வீட்டார் நிறுத்தி உள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset