நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெசுமா, எச்ஆர்டி கோர்ப், மித்ராவின் மலேசிய இந்திய இளைஞர் திறன் பயிற்சிகளில் பங்கேற்க 3,000 பேர் விண்ணப்பம்: பிரபாகரன்

கிள்ளான்:

கெசுமா, எச்ஆர்டி கோர்ப், மித்ராவின் மலேசிய இந்திய திறன் பயிற்சிகளில் பங்கேற்க 3,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுவின் தலைவர் பி. பிரபாகரன் இதனை கூறினார்.

இந்திய இளைஞர்களுக்கு திறன் பயிற்சியளிக்கும் நோக்கில் மனிதவள அமைச்சர் (கெசுமா), எச்ஆர்டி கோர்ப், மித்ரா ஆகியவற்றின் கீழ் மிசி எனப்படும் மலேசிய இந்திய திறன் பயிற்சித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆபத்தான பொருட்களுக்கான கனரக லோரி ஓட்டுநர், செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட் வேளாண்மை உட்பட அதிக தேவை உள்ள துறைகளில் இப்பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இப்பயிற்சிகளுக்கு இதுவரை 3,000 இளைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

கிள்ளானில் நடைபெற்ற ஆபத்தான பொருட்கள் ஒருங்கிணைந்த லோரி ஓட்டுநர் பயிற்சி திட்ட நிகழ்வில் பேசிய பிரபாகரன் இதனை கூறினார்.

இந்த லோரி ஓட்டுநடுக்கான பயிற்சிக்கு அதிகமான இளைஞர்கள் விண்ணம் செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் இந்த சிறப்புப் பயிற்சிக்கான அதிக தேவைகள் வெளிப்பட்டுள்ளது.

மேலும் மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் திறன்களை மேம்படுத்துவதற்கான உறுதியை அரசாங்கம் கொண்டுள்ளது.

குறிப்பாக இந்தப் பிரிவில் உள்ள லோரி ஓட்டுநர்கள் அதிக சம்பளத்தையும் சிறந்த பணிப் பாதுகாப்பையும் பெறுவார்கள்.

மூன்று நாட்கள் நடத்தப்பட்ட தீவிர பயிற்சி, பங்கேற்பாளர்களுக்கு போட்டித்தன்மை வாய்ந்த நன்மையையும் அளித்தது.

அதுமட்டுமின்றி, இந்தப் பயிற்சித் திட்டத்தின் பட்டதாரிகள் தொழில்முனைவோரில் ஈடுபடுவதற்கான வாய்ப்பைப் பெறுவது மட்டுமல்லாமல் உயர் பதவிகளுக்கும் தகுதி பெறுகிறார்கள்.

மேலும் லோரி ஓட்டுநர்கள் தங்கள் வாழ்க்கையை முன்னேற்றுவதற்குத் தேவையான சான்றிதழ், நிபுணத்துவத்துடன் அவர்களை மேம்படுத்தும்.

அதன் அடிப்படையில் இந்த ஒருங்கிணைந்த பயிற்சி மற்றொரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது என்று பிரபாகரன் கூறினார்.

ஆறு மாதங்களாக வேலை தேடி வரும் எனக்கு இப்பயிற்சி திட்டம் புதிய நம்பிக்கையை தருகிறது.

இப்பயிற்சி சான்றிதழைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு மடானி அரசுக்கு நன்றியுள்ளவனாக உள்ளேன் என்று 29 வயதான வி. கலைச்செல்வன் கூறினார்.

இப்பயிற்சியின் மூலம் தனது திறனை மேம்படுத்திக் கொள்ள இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.

தொழில் முன்னேற்ற வாய்ப்புகள் இல்லாத கிக் பொருளாதாரத்தில் மூன்று வருடங்கள் நான் பணியாற்றினேன்.

இந்தப் பயிற்சியின் மூலம், நான் ஒரு லாரி ஓட்டுநராக சான்றிதழைப் பெறுவது மட்டுமல்லாமல், 

எனது வாழ்க்கையை ஒரு நிர்வாகப் பதவிக்கு வளர்க்கும் வாய்ப்பையும் பெறுவேன் என்று ஈப்போவைச் சேர்ந்த 38 வயதான டி. தேவேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset