நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சி அமைக்கிறது பாஜக

டெல்லி: 

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. 

ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி நிலவிய நிலையில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கிறது பாஜக.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 40 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 22 தொகுதிகளிலும் வென்றுள்ளன. காங்கிரஸ் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

கல்காஜி தொகுதியில் இடைக்கால முதலமைச்சர் அதிஷி 989 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்த நிலையில் முதல்வர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார்.

9 சுற்றுகள் வரை தொடர்ந்து பின்தங்கியிருந்த அதிஷி, இறுதிச் சுற்றில் 989 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

பாஜக வெற்றியை அக் கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset