
செய்திகள் மலேசியா
சொக்சோ பங்களிப்பாளர்களுக்கு பேனல் கிளினிக்குகளில் இலவச சிகிச்சை; இவ்வாண்டு முதல் அமலுக்கு வரும்: ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
இவ்வாண்டு முதல் சொக்சோ பங்களிப்பாளர்களுக்கு பேனல் கிளினிக்குகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சொக்சோ பங்களிப்பாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.
இவர்கள் 1,400க்கும் மேற்பட்ட மருத்துவ கிளினிக்குகளில் எந்தக் கட்டணமும் இல்லாமல் சிகிச்சை பெறலாம்.
இப்புதிய திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தத் தொடங்கும்.
இதுவரை பங்களிப்பாளர்களின் நலன், பாதுகாப்பிற்காக மறுவாழ்வு, டயாலிசிஸ், ஊனமுற்றோர் உதவித் தொகை உள்ளிட்ட பல வசதிகள், சலுகைகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
அவசரகால சூழ்நிலைகளில் பங்களிப்பாளர்கள் தங்களுக்குத் தேவையான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதில் இது ஒரு முக்கியமான படியாகும்.
கடந்த ஆண்டு மருத்துவ சிகிச்சை கோரிக்கைகளில் 8 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலுத்தப்பட்டது.
இதில் சொக்சோவின் பேனல் கிளினிக்குகளில் சிகிச்சை பெறும் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளன.
தொழிலாளர்கள் சிகிச்சை செலவுகளை முன்கூட்டியே செலுத்தி, ஒரு மாதத்திற்குப் பிறகு சொக்சோவிடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
ஆனால் இந்த ஆண்டு முதல் இலவசமாக சிகிச்சைகளை பெறலாம்.
அங்கு தொழிலாளர்கள் எந்த சிகிச்சை செலவுகளையும் முன்கூட்டியே செலுத்த வேண்டியதில்லை.
தொழிலாளர்கள் இப்போது சிகிச்சை பெற எந்தவொரு சொக்சோ பேனல் கிளினிக்கிலும் தங்கள் அடையாள அட்டையைக் காட்டினால் போதும்.
சிகிச்சைக்கான செலவை சொக்சோ முழுமையாக ஈடுகட்டும்.
இதனால் தொழிலாளர்கள் எந்த நிதிச் சுமையும் இல்லாமல் சிகிச்சை பெறுவது எளிதாக இருக்கும்.
சொக்சோவின் சீனப் புத்தாண்டு சிறந்த இல்ல உபசரிப்பில் பேசிய அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2025, 4:22 pm
கோயில் இடமாற்ற விவகாரம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும்: கோபிந்த் சிங்
March 20, 2025, 4:21 pm
லாபமற்ற நிறுவனங்களின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்
March 20, 2025, 4:00 pm
இனங்களுக்கு இடையிலான மோதல்களும் சண்டைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: பிரதமர் அன்வார்
March 20, 2025, 3:40 pm
அனுபவம், தகுதிகளின் அடிப்படையில் பினாங்கின் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார்: சாவ் கோன் இயோ
March 20, 2025, 1:31 pm
மடானி அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு ஆலயமும் உடைபடாது: டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
March 20, 2025, 1:10 pm
புக்கிட் பிந்தாங்கில் பேரரசர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார்
March 20, 2025, 12:03 pm
ஜொகூரில் வெள்ளம்: 10 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன
March 20, 2025, 12:02 pm