நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வியட்னாமுக்குத் திருப்பிவிடப்பட்ட ஸ்கூட் விமானம்

ஹோ சி மின்:

சிங்கப்பூரிலிருந்து சீனாவின் சாங்ஷா நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஸ்கூட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வியட்னாமுக்குத் திருப்பிவிடப்பட்டது.

விமானம் ஹோ சி மின் நகரில் தரையிறங்கியது.

அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் வேறு வழியின்றி வியட்னாமில்  தங்க வைக்கப்பட்டனர்.

ஸ்கூட் விமானம் எண் டிஆர்124, மறுநாள் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

சிங்கப்பூருக்கும் சாங்ஷா நகருக்கும் இடையிலான பயண நேரம் ஏறத்தாழ நான்கு மணி நேரம், 40 நிமிடங்களாகும்.

ஆனால் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதைக் கண்டுபிடித்த விமானிகள் ஹோ சி மின் நகரில் விமானத்தை தரையிறக்கினர்.

இந்தத் தகவல்களை ஸ்கூட் விமானச் சேவை நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டார்.

பாதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை ஸ்கூட் வெளியிடவில்லை.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset