
செய்திகள் உலகம்
ஆப்கன் அகதிகளை திருப்பி அனுப்புகிறது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
ஆப்கன் அகதிகளை அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து டான் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், பாகிஸ்தானில் சட்டபூர்வமாகத் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளையும் அவர்களின் நாட்டுக்கு படிப்படியாகத் திருப்பி அனுப்புவதற்கான செயல்திட்டத்தை அரசு வகுத்துள்ளது.
இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளிடம் உரிய ஆவணங்கள் இருந்தாலும் அவர்களை அந்த நகரங்களிலிருந்து வெளியேற்றி பிற பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் அனைவரையும் ஆப்கானிஸ்தானுக்கே திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கான் போர்களின்போதும் ஏராளமான ஆப்கன் அகதிகள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர்.
பாகிஸ்தானில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கன் அகதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
May 7, 2025, 5:33 pm
ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு
May 7, 2025, 3:50 pm
இந்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்: பாகிஸ்தான் அறிவிப்பு
May 6, 2025, 4:03 pm