
செய்திகள் இந்தியா
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு கிலியைக் கிளப்பும் எச்-1பி, எல்-1 விசா விவகாரம்
வாஷிங்டன்:
எச்-1பி, எல்-1 விசாக்களின் அனுமதி காலம் நிறைவடைந்தால், அதனை 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவர அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சிக்கு முன்பு, வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி, எல்-1 விசாக்களின் காலம் நிறைவடைந்தால் 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இதையடுத்து புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை 540 நாள்களாக அதிகரித்து பைடன் அரசு பொறுப்பேற்ற பிறகு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், ஜோ பைடனின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் ஜான் கென்னடி, ரிக் ஸ்காட் ஆகியோர் மறுஆய்வுச் சட்டத்தின் கீழ் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
”பைடன் அரசின் 540 நாள்கள் கால நீட்டிப்பு ஆபத்தான முடிவு. இதனால் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்காணிப்பது காவல்துறைக்கு பெரும் பிரச்சினையாக மாறிவிடும்.
குடியேற்றச் சட்டங்களை செயல்படுத்துவதற்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்காகவும் பைடன் அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்” என்று தீர்மானத்தில் ஜான் கென்னடி குறிப்பிட்டுள்ளார்.
எச்-1பி, எல்-1 விசா என்றால் என்ன?
தொழில்நுட்பம், பொறியியல், நிதி போன்ற சிறப்புத் துறைகளில் வெளிநாட்டு நிபுணர்களை பணியமர்த்த அமெரிக்க நிறுவனங்களை அனுமதிக்கிறது.
எச்-1பி விசா
எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் இணையர், அவர்களின் 21 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு வழங்கப்படுகிறது.
எல்-1 விசா
பன்னாட்டு நிறுவனங்களின் வெளிநாடுகளில் உள்ள தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களை அமெரிக்காவில் உள்ள கிளைக்கு மாற்றுவதற்கு அனுமதிக்கிறது.
எல்-2 விசா
எல்-1 விசா வைத்திருப்பவர்களை சார்ந்திருப்பவர்கள் இந்த விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரியவும், படிக்கவும் அனுமதிக்கிறது.
இந்தியர்களுக்கு எவ்வாறு பாதிப்பு?
2023 தரவுகளின்படி, இந்தியாவைச் சேர்ந்த 76,671 பேர் எல்-1 விசாவும், 83,277 பேர் எல்-2 விசாவும் வைத்துள்ளனர். அதேபோல், அமெரிக்காவால் வழங்கப்பட்டுள்ள மொத்த எச்-1பி விசாக்களின் 71 சதவிகிதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசாக்களில் அமெரிக்கா செல்லும் பெரும்பாலான இந்தியர்கள் தகவல் தொழில்நுட்பம், பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
ஏற்கெனவே சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியை டிரம்ப் அரசு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm