
செய்திகள் உலகம்
விமானத்தில் பெட்டி வைக்கும் இடத்தில் இனி Power Bank சாதனத்தை வைக்கக் கூடாது: ஏர் புசான் விமான நிறுவனம்
சியோல்:
விமானத்தில் இருக்கைகளுக்கு மேல் பெட்டி வைக்கும் இடத்தில் Power Bank சாதனங்களை இனி வைக்கக்கூடாது என்று ஏர் புசான் விமான நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், பயணிகள் தங்கள் கைகளிலுள்ள பைகளில் மட்டுமே சாதனங்களை வைத்துக் கொள்ளலாம்.
அப்படிச் செய்வதால், கைத்தொலைபேசிகளுக்கு மின்னூட்டும் Power Bank கையடக்கச் சாதனங்கள் தீப்பிடித்தால் அதை விரைவில் அணைக்க முடியுமென ஏர் புசான் விமான நிறுவனம் கூறியுள்ளது.
Power Bank சாதனங்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக நிறுவனம் கூறியது.
தீப்பிடிக்கும் சாதனங்களைக் கையாள சிப்பந்திகளுக்குப் பயிற்சி வழங்கப்படுவதாக அது தெரிவித்தது.
கடந்த மாதம் 28-ஆம் தேதி தென் கொரியாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புறப்படவிருந்த விமானம் தீப்பற்றிக் கொண்டது.
விமானத்திலிருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தீ எப்படி ஏற்பட்டது என்று இன்னும் தெரியவில்லை.
இருக்கைகளுக்கு மேல் பெட்டி வைக்கும் இடம் தீப்பற்றிக்கொண்டதாக நம்பப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 19, 2025, 3:34 pm
மியன்மாரின் இணைய மோசடி நிலையங்களில் இன்னும் 100,000 பேர் வரை இருக்கலாம்
March 19, 2025, 12:35 pm
விண்வெளியில் அதிக நாட்களைக் கழித்த 2-ஆவது அமெரிக்க விஞ்ஞானியானார் சுனிதா வில்லியம்ஸ்
March 19, 2025, 12:10 pm
பாகிஸ்தானில் சீனாவின் மோசடி கால் சென்டர்: பொது மக்கள் கொள்ளை
March 18, 2025, 3:26 pm
விமானம் தண்ணீருக்குள் விழுந்தது: 7 பேர் மரணம்
March 18, 2025, 12:04 pm
சிங்கப்பூரில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ரயில்களும் பேருந்துகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன
March 18, 2025, 11:43 am
பிட்காயினை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சிங்கப்பூர் இளைஞர் அமெரிக்காவில் கைது
March 18, 2025, 11:14 am