
செய்திகள் இந்தியா
சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என்று கேட்ட சிறுவன்: அமைச்சர் ஏற்பு
கொச்சின்:
அங்கன்வாடி சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என சிறுவன் விடுத்த வேண்டுகோளை கேரள அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த சிறுவன் சாங்கு. இவனுக்கு பிரியாணி மிகவும் பிடித்த உணவு. ஆனால் இவன் செல்லும் அங்கன்வாடியில் அடிக்கடி உப்புமா வழங்குகின்றனர். இது சிறுவனுக்கு பிடிக்கவில்லை. ‘‘அங்கன்வாடியில் உப்மாவுக்கு பதில் பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேண்டும்’’ என சிறுவன் சாங்கு கூறியதை அவனது தாய் செல்போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டார். இந்த காணொலி வைரலாக பரவியது.
இந்த வீடியோவை பார்த்த கேரளாவின் சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அங்கன்வாடி உணவு பட்டியல் மறுபரிசீலனை செய்யப்பட்டு பிரியாணி சேர்க்கப்படும் என கூறியுள்ளார்.
சிறுவனுக்கும், அவனது தாய்க்கும் அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிறுவன் சாங்குவின் தாய் கூறுகையில், ‘‘ இந்த காணொலி சமூக ஊடகத்தில் வெளியானதில் இருந்து பலர் எனக்கு போன் செய்து சாங்குவுக்கு பிரியாணியையும் பொரித்த கோழியும் வழங்க முன்வந்துள்ளனர்’’ என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2025, 11:30 am
வட மாநிலங்களில் ஹோலி – ரமலான் ஜூம்ஆ தொழுகை அமைதியாக நடந்து முடிந்தது
March 15, 2025, 10:42 am
ஹோலி பண்டிகையில் கஞ்சா ஐஸ்கிரீம் விற்பனை
March 14, 2025, 1:50 pm
டெல்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது
March 11, 2025, 10:01 am
கேரளாவில் யூடியூப் காணொலி பார்த்து டயட் செய்த இளம் பெண் உயிரிழப்பு
March 11, 2025, 9:56 am
சமஸ்கிருதம்தான் தமிழைவிட பழைமையானது: பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே
March 10, 2025, 1:23 pm