நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச விடாமல் பாஜக உறுப்பினர்கள் அமளி

புதுடெல்லி:

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்தார். அவரைப் பேச விடாமல் பாஜக உறுப்பினர்கள் அமளிஈடுபட்டனர். 

மக்களவையில் ராகுல் காந்தி உரை
குடியரசுத் தலைவர் உரையில் ஏற்கனவே கூறப்பட்டதே பலமுறை மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. குடியரசுத் தலைவர் உரையில் எந்த முக்கிய அம்சமும் இல்லை என்று ராகுல் காந்தி கூறினார்.

வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க அரசு திணறல்:
வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க ஒன்றிய அரசு திணறி வருகிறது. இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க ஒன்றிய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. நாட்டின் வளர்ச்சி விகிதம் மிகவும் மெதுவாகவே உள்ளது; உற்பத்தி துறையில் இந்தியா பின்தங்கியே உள்ளது. இளைஞர்களுக்கு எந்த ஒரு திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமர் மோடி தவறிவிட்டார் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

உற்பத்தி அனைத்தும் சீனாவிடம் உள்ளது: 
நாட்டில் நுகர்வோர்கள் அதிகமாக உள்ளனர், ஆனால் உற்பத்தி அனைத்தும் சீனாவிடம் உள்ளது. செல்போன் உதிரிபாக உற்பத்தி உள்ளிட்ட அனைத்தும் சீனாவிடம்தான் உள்ளது. வேலையில்லா திண்டாட்ட பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமர் தவறி விட்டார் என்றும், மேக் இன் இந்தியா திட்டத்தில் பிரதமர் மோடி தோல்வி அடைந்துவிட்டார் என்றும் ராகுல் காந்தி குற்றச்சாட்டினார்.

உற்பத்திதுறை மீது இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். உலக தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்கள் நடக்கின்றன; அதற்கேற்ப இந்தியாவும் மாற வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்தார்.

சமூக பதற்றம் அதிகரித்து வருகிறது:
சமூக பதற்றம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேசவிடாமல் பாஜக உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டார்கள். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset