நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலையில் பக்தர்கள் செல்லும் சாலைகள் சுத்தம் செய்யப்பட்டது: கோபி

பத்துமலை:

பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு பக்தர்கள் செல்லும் சாலைகள் சுத்தம் செய்யப்பட்டது.
 
கோம்பாக் தொகுதி மஇகா தலைவர் கோபி இதனை கூறினார்.

தைப்பூச விழா பத்துமலையில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால் குடம், காவடி ஆகியவற்றை ஏந்தி ஆற்றங்கரையில் இருந்து நடந்து வருவார்கள். அப்படி வரும் பக்தர்களின் வசதிக்காக சாலையோரங்களில் சுத்தம் செய்யப்பட்டது.

தொடர் பொது விடுமுறைகளால் அதிகமான பக்தர்கள் பத்துமலைக்கு வருவார்கள். இது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

கோம்பாக் மஇகா இளைஞர் பகுதி தலைவர் மோகன் தலைமையில் இத்துப்புறவு பணி மேற்கொள்ளப்பட்டது.

 ஒவ்வொரு ஆண்டும் இந்த பணியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கோபி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset