நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவிட்-19 பரவல் காரணமாக அக்டோபர் 25 முதல் நவம்பர் 27 வரை மலாக்காவில் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை: கைரி ஜமாலுத்தீன்

பெடலிங் ஜெயா: 

மலாக்காவில் தேர்தல் நாள் நெருங்கி வருவதால் கோவிட் -19 தொற்றுப் பரவல் காரணமாக மாநிலத்தில் அக்டோபர் 25 முதல் நவம்பர் 27 வரை அரசியல் கூட்டங்களுக்கு சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.

மாநிலத் தேர்தலுக்கான நிலையான நடமாட்ட க் கட்டுப்பாட்டு நடைமுறைகள் (எஸ்ஓபி) இருக்கும் போது, இது நவம்பர் 8 முதல் துவங்கும் பிரச்சார காலத்தில் மட்டுமே நடைமுறைக்கு வரும். இருப்பினும் அதற்கு முன்பு ஏராளமானோர் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் மக்கள் கூட்டத்தை சந்திப்பதிலும் இருக்கும் ஆபத்தை  அமைச்சகம் கவலை கவலையோடு பார்க்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் குறிப்பிட்டார். 

“மலாக்கா தேசிய மீட்புத் திட்டத்தின் 4 ஆம் கட்டத்தில் இருப்பதால், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி SOPகளைப் பின்பற்றி அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. 

"இருப்பினும்,  கூட்டம் கூடும்போது அரசியல் கட்சிகள் (என்னுடையது உட்பட) SOP களை கவனிக்க முடியாது.

"பொது சுகாதார நலன் கருதி, இனிமேல் அனைத்து அரசியல் கூட்டங்களும் மலாக்காவில் அனுமதிக்கப்படாது" என்று கைரி ஜமாலுதீன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset