நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிறிஸ்துமஸ் பண்டிகை அனைவருக்கும் புதிய நம்பிக்கையை தரட்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

கிறிஸ்துமஸ் பண்டிகை மலேசியர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை தர வேண்டும்.

பெர்சத்து சயாப் பிரிவின் சிரம்பான் தொகுதி தலைவர் டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

மலேசியர்களைத் தவிர்த்து உலகளாவிய மக்கள் இன்று கிறித்துமஸ் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இவ்வேளையில் இப் பெருநாளை கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

இன்றைய தினம் மன்னிப்பை மக்களுக்கு அருளிய  இயேசு பெருமான் பிறந்த தினமாகும். மக்களின் துன்பம் மறைந்த தினமாகும்.

உலகிற்கு அமைதியையும் சமாதானத்தையும் போதித்த ஏசு கிறிஸ்துவின் பிறந்தநாளில் அவரது போதனைகளை பின்பற்றி நாம் நடக்க வேண்டும்.

ஆக இப்பெருநாளை அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையுடனும் இப்பெருநாளை கொண்டாட்ட வேண்டும்.

மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும் புதிய நம்பிக்கையை தர வேண்டும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset