நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகுதிநேர வேலை மோசடி: 1 லட்சத்து 47ஆயிரம் ரிங்கிட்டை இழந்த இல்லத்தரசி: போலிஸ் தகவல் 

குவாந்தான்: 

குவாந்தான், பெராவில் உள்ள இல்லத்தரிசி ஒருவர் சமூக ஊடகங்களின் வாயிலாக பகுதிநேர வேலை மோசடியில் சிக்கி 1 லட்சத்து 47ஆயிரத்து 753 ரிங்கிட்டை இழந்தார் 

பகாங் மாநில போலிஸ் தலைவர் யஹ்யா ஒத்மான் இந்த தகவலைத் தெரிவித்தார் 

ஒரு பொருளை விற்றால் அதிகப்படியான லாபம் கிடைக்கப்படும் என்ற ஆசையின் காரணமாக பாதிக்கப்பட்ட பெண் இந்த போலி வேலை மோசடியால் ஈர்க்கப்பட்டார் 

பாதிக்கப்பட்ட பெண் 28 பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒரு லிங்க்கினைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் 

2 லட்சம் கமிஷன் லாப பணத்தை மீட்கமுடியாமல் போன பிறகு தாம் மோசடியால் ஏமாற்றப்பட்டதாக அந்த இல்லத்தரிசி உணர்ந்தார் என்று யாஹ்யா கூறினார். 

பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட வேண்டாம் என்று அவர் நினைவுறுத்தினார்

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset