நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

53 ஆண்டிற்கு பிறகு சந்தித்த ஈப்போ செட்டியார் கலாசாலை மாணவர்கள்

ஈப்போ:

பேராக் தலைநகர் ஈப்போவிலுள்ள ஜாலான் லகாட் செட்டியார் தமிழ்ப்பள்ளியில் 1966 இல் முதலாம் ஆண்டை தொடக்கி 1971ல் ஆறாம் ஆண்டை முடித்த மேனாள் மாணவர்கள் 53 ஆண்டிற்கு பின் சங்கமம் ஆயினர். 

இவர்களுக்கு தற்போது 65 வயது என்றாலும் தங்களின் வகுப்பு தோழர்களை சந்திக்கும் நிகழ்வு கனவு நிகழ்வானதாக பத்துகாஜா செங்காட் தமிழ்ப்பள்ளியின் மேனாள் தலைமையாசிரியரும், இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான கருப்பையா கூறினார்.

அன்றைய காலகட்டத்தில் இப் பள்ளியின் பெயர் செட்டியார் கலாசாலையாக இருந்து வந்தது, இப்பொழுது அதன் பெயர் செட்டியார் தமிழ்ப்பள்ளியாக உருமாற்றம் பெற்றுள்ளது. 

அண்மையில் இங்கு பயின்ற எங்கள் வகுப்பு மாணவர்கள் ஈப்போ ஆனந்த பகவான் உணவகத்தில் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்முறையாக ஏற்பாடு செய்த இந்நிகழ்வு மிகவும் சிறப்பாகவும், மறக்க இயலாத நினைவலைகளை கொண்டதாக அமைந்தது என்று அவர் மகிழ்ச்சிகரமாக கூறினார்.

இந்சந்திப்பில் மேனாள் மாணவர்கள் தங்கள் வாழ்க்கை பயணம் குறித்தும் அதன் வாயிலாக ஏற்பட்ட சுவாரசியங்களையும் தங்கள் நீங்கா அனுபவங்களையும் பதிவு செய்தனர். குறிப்பாக, நண்பர்கள் அவ்வப்போது சந்தித்து அளவளாவது சிறந்த பண்பாகும். இதன் வாயிலாக மகிழ்ச்சியும் கருத்து பரிமாற்றங்களும் நமக்கு தற்முனைப்பாக விளங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மாணவர்கள் தற்போதைய பள்ளி நிர்வாகத்திற்கு உதவி புரிவது வரவேற்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் மேனாள் பள்ளி என்பதால் அப்பள்ளிக்கு உதவ திட்டமிட்டுள்ளோம். அதன் அடிப்படையில் இப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் குறிப்பிட்ட எண்ணுடன்(010-9616227) தொடர்புக்கொள்ளுமாறு கருப்பையா கேட்டுக்கொண்டார்.

- ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset