நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பொய் பரப்பப்படுகிறது: ஃபரூக் அப்துல்லா

ஜம்மு: 

இந்தியாவில் ஹிந்துக்கள் 80 சதவீதம் உள்ள நிலையில், அவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பொய் பரப்பப்பட்டு வருகிறது என தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா  கூறினார்.

ஜம்முவில் பேசிய அவர், இந்தியாவுக்கு அஞ்சுறுத்தல் என்பது நாட்டுக்குள்தான் இருக்கிறதே தவிர, நாட்டுக்கு வெளியே இல்லை. நாட்டுக்கு உள்ளே இருப்பவர்கள்தான் நாட்டை அழித்து வருகின்றனர். ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பொய் பரப்பப்பட்டு வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டது.

இந்த வதந்தியை உடைக்கும் கடமை நம் அனைவருக்கு உண்டு. இந்தியாவில் 80 சதவீதம் ஹிந்துக்கள் உள்ள நிலையில் என்ன அச்சுறுத்தல் உள்ளது?

சிறப்பு அந்தஸ்து சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர்  ஜம்முவில் உள்ளூர் வேலைவாய்ப்புகள் வெளிமாநிலத்தவர்கள் கைகளுக்குச் சென்றுவிட்டது.

காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால் வெளிமாநிலத்தவர் அங்கு வர தயங்குகிறார்கள். உங்கள் நிலம் பறிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset