நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

மலேசியாவுக்கு அணுசக்திக்கான அவசரத் தேவை இல்லை: பிரதமர்

சுவிட்ஸர்லாந்து:

அணுசக்தியை ஏற்றுக் கொள்வதற்கான அவசரத் தேவை மலேசியாவுக்கு இன்னும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

இதற்குக் காரணம் சோலார் சக்தியும், ஆசியான் கிரிட் சக்தியும் பல ஆற்றல்களைக் கொண்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை மலேசியாவில் அணுசக்தி ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் ஏற்படவில்லை. 

இருப்பினும், மலேசியாவில் தரவு மையங்களை உருவாக்குவதற்கான முக்கிய திட்டங்களைச் செய்லபடுத்தப்பட இந்த அணுசக்தி பயன்படுத்தச் சாத்தியம் ஏற்படலாம்.

தரவு மையங்களின் ஆற்றல் நுகர்வு பெரியது. ஒவ்வொரு சந்திப்பு கூட்டத்திலும்  எஸ்எம்ஆர் நிறுவ விரும்புவதாக பரிந்துரைத்தக் காரணத்தினால் இந்த அணுசக்தி பயன்படுத்த நேரிடலாம் என்றும் கூடுதலாக பிரதமர் விவரங்களைத் தெரிவித்தார்.

இவ்வாறு அணுசக்தி பயன்பாட்டை பரிந்துரைத்தவர்களின் நம்பிக்கையை முறியடிக்காமல் இது ஒட்டுமொத்த செயற்கை நுண்ணறிவு தேவைகளின் ஒரு பகுதியாக அணுசக்தி கருதப்படுவதை அவர் ஏற்றுக் கொண்டார்.

தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா முன்னதாகவே இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளது.

மேலும் இந்த முயற்சிக்கு ஏற்றாற்போல சிறந்த வரவுசெலவு திட்டம் இருப்பதைக் காட்டி, ஒத்துழைப்பதை உறுதி செய்ய பிரதமர் பணியாற்றி வருவதாகக்  கூறினார்.

உலக பொருளாதார மன்றத்தின் செய்தியாளர் சந்திப்பில் மலேசியா அணுசக்தியை ஊக்குவிப்பது குறித்து பரிசீலித்து வருகிறதா என்று கேட்டதற்கு பிரதமர் இவ்வாறு கூறினார்.

- நந்தினி ரவி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset