நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு காலாவதியான சட்டங்களை நாம் பயன்படுத்த முடியாது: பிரதமர் 

டாவோஸ்:

புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு காலாவதியான சட்டங்களை நாம் பயன்படுத்த முடியாது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மலேசியா குறிப்பாக தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விரைவான வேகத்தில் பயணிப்பதில் ஏற்பட்டுள்ள பல புதிய சவால்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

இதற்கு காலாவதியான சட்டங்களைத் தொடர்ந்து கொண்டிருக்க முடியாது.

இந்த சவால்களை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பில் சிறந்த வாய்ப்புகளை அரசாங்கம் வளர்க்க வேண்டும்.

மேலும் உலகளாவிய முன்னேற்றங்களுக்கு ஏற்ப சமீபத்திய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான  உறுதிப்பாட்டையும் அரசாங்கம் நிலை நிறுத்துகிறது.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து சமீபத்திய தொடர்புடைய சட்டங்களையும் நாங்கள் எடுத்துக் கொண்டு, அதற்கேற்ப அவற்றை மாற்றியமைக்கிறோம்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின்ஆண்டு உச்சநிலை மாநாட்டில்,

ஆசியானின் டிஜிட்டல் எதிர்காலத்தைத் திறத்தல், உலகளாவிய போட்டித்தன்மையை இயக்குதல் என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் டத்தோஶ்ரீ அன்வார் செய்தியாளரிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset