நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சந்தேகத்திற்குரியவர்களின் கைத்தொலைபேசிகள் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்படும்: ஐஜிபி 

கோலாலம்பூர்:

சந்தேகத்திற்குரிய நபர்களின் கைத்தொலைபேசிகள் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார்.

வழக்கு விசாரணையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களிடம் மட்டுமே போலிசார் கைத்தொலைபேசிகளை  சோதிப்பார்கள்.

அதே வேளையில் பொது இடங்களில் மக்களின் கைத்தொலைபேசிகளை தன்னிச்சையாகவும், சீரற்ற முறையிலும் போலிஸ் சரிபார்க்காது.

ஒருவர் குற்றம் செய்திருப்பதைக் குறிக்கும் தகவல் நியாயமான சந்தேகம் இருக்க வேண்டும்.

இது ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள போலிஸ் அதிகாரிகளால் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset