நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரளா விமானத்தில் நடுவானில் மரணமடைந்த 11 மாதக் குழந்தை

கொச்சின்:

கொச்சினை நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் தாயுடன் பயணித்த 11 மாதக் குழந்தை திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு மரணமடைந்தார்.

கட்டார் தலைநகர் டோஹாவில் இருந்து கொச்சினை நோக்கி கல்ஃப் ஏர் விமானம் வந்து கொண்டிருந்தது.

இந்த விமானத்தில் ஃபெசின் அஹமத் என்ற 11 மாதக் குழந்தை தனது தாயுடன் பயணித்துக் கொண்டிருந்த போது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இது குறித்து கொச்சி விமான நிலையத்துக்கு தகவளித்த நிலையில்.

விமானம் தரையிறங்கியதுடன் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது.

ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்ததாக அறிவித்தனர்.

இது குறித்து போலிசில் புகார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset