நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மொக்ஸானி, மிர்சானின் சொத்து அறிவிப்பில் எம்ஏசிசி திருப்தியடைந்துள்ளது: அஸாம் பாக்கி

புத்ராஜெயா:

மொக்ஸானி, மிர்சானின் சொத்து அறிவிப்பில் எம்ஏசிசி திருப்தியடைந்துள்ளது.

எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ  அசாம் பாக்கி இதனை கூறினார்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முஹம்மதுவின் இரண்டு மகன்களின் சொத்து அறிவிப்புகளில் திருப்தி அடைந்துள்ளது.

மொக்ஸானி தனது மொத்த சொத்துக்கள் சுமார் 1 பில்லியன் ரிங்கிட் மதிப்புடையதாகவும், தனிப்பட்ட சொத்து மதிப்பு 316 மில்லியன் ரிங்கிட்டாகும்.

மேலும், மிர்சான் மொத்த சொத்துக்கள்  246.2 மில்லியன் ரிங்கிட் என்றும், தனிப்பட்ட சொத்துக்கள் 120 மில்லியன் ரிங்கிட் என்றும் அறிவித்துள்ளார்.

இதைத்தான் எனது தடயவியல் அதிகாரிகள் பகுப்பாய்வு செய்து மதிப்பிடுகிறார்கள் என்று அவர் எம்ஏசிசி தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

வழங்கப்பட்ட சொத்து அறிவிப்பில் நான் திருப்தி அடைகிறேன். எதிர்காலத்தில் மேலும் முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset