நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொது பல்கலைக்கழங்களில் இணைய வசதியை மேம்படுத்த 600 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது: ஃபஹ்மி ஃபாட்சில் 

கோலாலம்பூர்: 

நாடு முழுவதுமுள்ள பொது பல்கலைக்கழங்களில் இணைய வசதியை மேம்படுத்த அரசாங்கம் 600 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார். 

ஏற்கனவே இணைய வசதிகள் இருந்தபோதிலும், பல சமயங்களில் ஏற்படும் இணையச் சிக்கல்கள் குறித்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி அமைச்சகத்தின் 
கருத்துக்களைப் பெற்று இந்த மேம்படுத்தும் நடவடிக்கை இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தொலைப்பேசியின் தொடர்பு சேவையை மேம்படுத்தப்படும் என்றும் பல்கலைக்கழக வளாகங்களுக்கு வெளியே கூடுதல் தொலைத்தொடர்பு கோபுரங்கள் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

முதல் கட்டமாக மலாயா பல்கலைக்கழகம், மலேசிய இஸ்லாமிய அறிவியல் பல்கலைக்கழகம் பெர்லிஸ் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் இணையச் சேவை மேம்படுத்தப்படும். 

இது பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குத்தகை செயல்முறைக்குப் பிறகு வரும் மாதங்களில் இரண்டாம் கட்டம் தொடங்கும் என்றும், ஆண்டு இறுதிக்குள் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் ஃபஹ்மி கூறினார்.

பெங்கலன் செப்பாவில் உள்ள திவான் கியூசாஹவானன் பல்கலைக்கழக மலேசியா கிளந்தனில் (UMK) ஆன்லைன் பாதுகாப்பு பிரச்சார பயணத்தை துவக்கிய பின்னர், ஃபஹ்மி செய்தியாளர்களிடம் பேசினார், இதில் அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோ முகமட் ஃபௌசி எம்டி இசாவும் கலந்து கொண்டார்.

இந்தத் திட்டத்திற்கு 13.7 மில்லியன் ஒதுக்குவதாக எம்சிஎம்சி தெரிவித்துள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset