நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என் வழக்கு மதம் பற்றி அல்ல, உறவு சார்ந்தது என்பதை குறிப்பிட்ட தலைமை நீதிபதிக்கு நன்றி: இந்திரா காந்தி

பெட்டாலிங் ஜெயா:

தன் மகளுடன் மீண்டும் சேர ஒன்பது ஆண்டுகளாகப் போராடி வரும் இந்திரா காந்தியின் போராட்டம் மதம் பற்றியது அல்ல, ஒரு தாயின் உரிமை பற்றியது என்பதைக் கூறிய தலைமை நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட்டுக்கு இந்திரா காந்தி நன்றி தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு, தனது முன்னாள் கணவர் கெ. பத்மநாதன் அல்லது முகம்மது ரிதுவான் அப்துல்லா, 11 மாத மகள் பிரசன்னா தீக்ஷாவை பறித்துச் சென்றார்.

தொடக்கத்திலிருந்தே இது மதம் சார்ந்தது அல்ல. ஒரு தாயின் உரிமை பற்றியது என்பதை எடுத்துரைத்த தலைமை நீதிபதிக்கு இதன் உண்மையான நோக்கை நினைவில் வைத்திருப்பதற்காக நன்றி தெரிவிக்கிறேன்,” என இந்திரா கூறினார்.

2018 ஆம் ஆண்டு கூட்டரசு நீதிமன்றம், ரிதுவான் தனது மூன்று குழந்தைகளையும் ஒருதலைப்பட்சமாக இஸ்லாத்திற்கு மாற்றியதை செல்லாதது எனத் தீர்மானித்தது. ஆனால் போலீஸ் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்திரா வருத்தம் தெரிவித்தார்.

“கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் மகளைக் கைப்பற்றி விடுவிக்க முடியுமென பலரும் நம்பினர். ஆனால் வழக்கு இன்னும் முடிவடையவில்லை; அதிகாரிகள் அமைதியாக உள்ளனர்.
நீதி கிடைப்பதற்காக நான் சட்ட ரீதியில் எல்லாம் செய்துவிட்டேன். இது ஒரு நீதியின்மை,” என அவர் கூறினார்.

தலைமை நீதிபதி தெங்கு மைமூன், இந்திராவின் வழக்கு தனது வழக்கறிஞர் வாழ்க்கையில் மிக முக்கியமான வழக்குகளில் ஒன்றாக இருந்ததாக தெரிவித்தார்.

சிவில் நீதிமன்றம் தாய்க்கு காவல்தகுதி அளித்தாலும், ஷரியா நீதிமன்ற உத்தரவுகள் வழக்கை சிக்கலாக்கின.

“இஸ்லாமைப் பற்றிப் பேசும் போது, அது முழுவதும் நீதியைப் பற்றியது. இனவெறி அல்லது மதத்தைப் பார்க்க வேண்டுமென்று அது கற்பிக்கவில்லை. சமூக நீதியே இஸ்லாத்தின் முதன்மை,” என்று அவர் கூறினார்.

“ஒரு தாயின் மகளை மறுக்கவும் அல்லது ஒரு மகளின் தாயை மறுக்கவும் இஸ்லாமில் எந்த அடிப்படையும் இல்லை,” என அவர் வலியுறுத்தினார்.

- தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset