நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தண்ணீர் பயன்பாட்டு வரம்புகள் குறித்த விதிமுறைகளை அரசாங்க நிறுவ வேண்டும்: ஸ்பான்

சைபர்ஜெயா:

தண்ணீர் பயன்பாட்டு வரம்புகள் குறித்த விதிமுறைகளை அரசாங்கம் உடனடியாக நிறுவ வேண்டும் என்று தேசிய நீர் சேவைகள் ஆணையமான ஸ்பான் தலைவர் சார்லஸ் சந்தியாகோ கூறினார்.

அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்துவதாக அறியப்படும் தரவு மையங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கான நீர் பயன்பாட்டு வரம்புகள் குறித்த விதிமுறைகளை நிறுவப்பட வேண்டும்.

தரவு மையங்களின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

காரணம் அம் மையங்களில் அதிக அளவு தண்ணீர், மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன.

நீர் விநியோகத்தை நிலையானதாகவும் திறம்படவும் அதிகரிக்க, ஆற்றுக்கு வெளியே சேமிப்பு வசதிகள் அல்லது அணைகள் கட்டுதல் போன்ற நீர்வள மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இதற்கு மத்திய அரசு மாநில அரசாங்கத்தின் தலைவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மலேசியா தரவு மையங்களை மிகவும் நீடித்து உழைக்க முடியாத வகையில் உருவாக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நடைமுறை தேசிய எரிசக்தி மாற்ற சாலை வரைபடத்தின் வழிகாட்டுதல்கள், பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு ஆகியவற்றுடன் ஒத்துப்போகும் வகையில் மாற்றப்பட வேண்டும் என்றும் சார்லஸ் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset