
செய்திகள் ASEAN Malaysia 2025
புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஆசியான் சர்வதேச ஒத்துழைப்பு முக்கியமானது: சைஃபுடின்
புத்ராஜெயா:
புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஆசியான் சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.
உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுதியோன் இதனை கூறினார்.
புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, புலனாய்வுப் பகிர்வு, கூட்டு நடவடிக்கைகள் மூலம் சர்வதேச ஒத்துழைப்பு முக்கியமானது.
அதன் அடிப்படையில் ஆசிய சர்வதேச பாதுகாப்பு உச்சி மாநாடு, கண்காட்சி எல்லை தாண்டிய குற்றம், சைபர் குற்றம், மனித கடத்தல் போன்ற புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்துகிறது.
குற்றங்கள் போன்ற இந்தப் புதிய வடிவிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாம் தனியாகத் தீர்ப்பது சாத்தியமற்றது.
நமக்கு பகிர்வு, உளவுத்துறை, தகவல் இல்லையென்றால் அது நமக்கு தான் பாதிப்பு. இதைத் தான் மலேசியா வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார்.
இதனிடையே ஆசிய சர்வதேச பாதுகாப்பு உச்சி மாநாடு, கண்காட்சியில் 300 நிறுவனங்களின் பங்கேற்றுள்ளன.
கிட்டத்தட்ட 5,000 முதல் 7,000 பார்வையாளர்களை ஈர்க்க இக்கண்காட்சி இலக்கு கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 12, 2025, 10:29 pm
இல்மு செயற்கை நுண்ணறிவு திட்டம்; வேலை வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது: கோபிந்த் சிங்
August 12, 2025, 10:26 pm
செயற்கை நுண்ணறிவு தேசமாக மாறுவதை மலேசியா இலக்காகக் கொண்டுள்ளது: பிரதமர்
July 27, 2025, 9:54 am
தாய்லாந்து - கம்போடியா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்: மலேசியா வலியுறுத்து
June 19, 2025, 12:27 pm