நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கும்பமேளாவில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீவிபத்து

புது டெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 18 கூடாரங்கள் எரிந்து நாசமாகின. இதில் உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

உத்தர பிரதேசத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது.
45 நாள்கள் நடைபெறும் இந்த ஆன்மிக நிகழ்வில் 7 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.

பக்தர்களுக்கான கூடாரங்கள் அமைந்துள்ள மகாகும்ப நகரின் 19வது மண்டலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து. அருகேயுள்ள கூடாரங்கள் தீப்பற்றி எரிந்து சேதமாகின.

தீயணைப்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset