செய்திகள் ASEAN Malaysia 2025
தேர்தலுக்கு முன்னுரிமை தராதீர்: மியன்மார் ராணுவ அரசாங்கத்திடம் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கோரிக்கை
லங்காவி:
இவ்வாண்டு தேர்தலை நடத்துவதற்குப் பதிலாக உள்நாட்டுப் பூசலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு ஆசியான் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மியன்மாரின் ராணுவ அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆசியான் கூட்டமைப்பின் தலைமைத்துவப் பொறுப்பை வகிக்கும் மலேசியா இத்தகவலை வெளியிட்டது.
பதற்றநிலையைப் போக்குவதற்குத்தான் முன்னுரிமை வழங்க வேண்டுமே தவிர தேர்தல் நடத்துவதற்கு அல்ல என்று நாங்கள் அவர்களிடம் கூறினோம் என்று வெளியுறவு அமைச்சர் முஹம்மது ஹசான் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.
ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த முன்னணி அரசதந்திரிகள் மலேசியாவின் லங்காவி தீவில் சந்திப்பு நடத்திய பிறகு அந்த செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.
ராணுவ ஆட்சியில் இயங்கும் மியன்மாரில் நிலவிவரும் நெருக்கடி தொடர்பில் ஆசியான் சிறப்புத் தூதராக மலேசியா ஒத்மான ஹஷிமை நியமித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
ஒத்மான் வெளியுறவு அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஆவார்.
ஆசியானின் அமைதித் திட்டத்தை மியன்மாரில் அமல்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள மலேசியா, அவரை நியமித்துள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:25 am
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
