நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலையில் சஞ்சய் ராய் குற்றவாளி

புது டெல்லி: 

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் குற்றவாளி என்று அந்த மாநிலத்தின் சியால்டா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெற்ற இந்தச்  சம்பவத்தில் 162 நாள்களில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
காவல் துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை காவல் துறை கைது செய்தது.  

சதஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் சிபிஐ வழக்கு விசாரணையில் கேட்டுக்கொண்டது.

இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். தண்டனை விவரங்கள் திங்கள்கிழமை அறிவிக்கப்படுகின்றன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset