நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 16 இந்தியர்களை காணவில்லை

புது டெல்லி:

உக்ரைனுக்கு எதிராக போரில் ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 16 இந்தியர்களை காணவில்லை என்று இந்தியா அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ரஷிய ராணுவத்தில் 126 இந்தியர்கள் பணியாற்றினர். அதில் 96 பேர் இந்தியா திரும்பிவிட்டனர். 12 பேர்  கொல்லப்பட்டனர். 16 பேரை காணவில்லை என்று ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் எங்குள்ளனர் என்பதை தெரிந்துகொள்வதற்கும், எஞ்சிய இந்தியர்களை விரைந்து தாயகம் அனுப்புவதற்கும் ரஷிய அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சகம் தொடர்பில் உள்ளது என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset