நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியர்கள் அல்லாத சிங்கப்பூரர்களும் இந்தியாவுக்குச் சென்றுவரவேண்டும்: சிங்கப்பூர் அதிபர் தர்மன்

புவனேஷ்வர்:

அதிபர் தர்மன் சண்முகரத்தினம் இந்தியர்கள் அல்லாத சிங்கப்பூரர்களும் இந்தியாவுக்குச் சென்றுவரவேண்டும்; இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தியப் பயணத்தின் இறுதிநாளான இன்று அதிபர் தர்மன் ஒடிஷாவில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அண்மையில் சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்களிடம் கற்றுக்கொள்பவைச் சிங்கப்பூரர்களுக்கு இந்தியாவில் திறம்படச் செயலாற்றப் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று அதிபர் கூறினார்.

மேலும் அவர்கள் சிங்கப்பூரின் வாழ்க்கைச் சூழலுடன் ஒன்றிவிட சிங்கப்பூரர்களும் உரிய முயற்சி எடுப்பது அவசியம் என்றார்.

இந்தியர்கள் அல்லாத சிங்கப்பூரர்கள் இந்தியாவில் பெறக்கூடிய வர்த்தக வாய்ப்புகளைத் தாண்டி உலகப் பார்வையை மேம்படுத்தும் கலாசார அனுபவத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று அதிபர் வலியுறுத்தினார்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset