நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுத்தாண்டில் கோப்பெங் தமிழ்ப்பள்ளி கட்டப்படும்: நாடாளுமன்ற உறுப்பினர் தான் கா இங்

கோப்பெங்: 

13 ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் கோப்பெங் தமிழ்ப்பள்ளி நிறுவப்படும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருவதாக கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் இங்குள்ள கோப்பெங் தமிழ்ப்பள்ளியின் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டபோது கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கா இங் கூறினார்.

அடுத்தாண்டு தொடக்கத்தில் புதிய பள்ளி கட்டுமானப் பணிகள் தொடங்கப்படலாம். கல்வித்துறையை சேர்ந்த அனைத்து தரப்பு இலாகாவினர் அனுமதி வழங்கி விட்டனர். இப்புதிய பள்ளிக்கான வரைபடங்கள், அதற்கான கட்டுமான நிதி குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் இவ்வாண்டில் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் 13 வது மலேசிய திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்படும். அதன் பின் பொருளாதார அமைச்சின் பார்வையில் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியீடு செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

May be an image of 10 people and people smiling

இங்குள்ள கோப்பெங் தமிழ்ப்பள்ளியில் 2025 ம் ஆண்டிற்கான பொங்கல் விழா மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் முதல் முறையாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை கண்டுகளித்து ஆச்சரியப்பட்டேன். குறிப்பாக, உரி அடித்தல், கரும்பை கடித்தல், கோலம் போடுதல், பூ கட்டுதல், தோரணம் பின்னுதல் மற்றும் பொங்கல் வைத்தல் போன்றவற்றை காணும் பொழுது மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வின் நிறைவுவிழாவில், மாணவர்களின் படைப்பாக சிலம்பம், பரதம் இடம்பெற்றது. அத்துடன், போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கா இங், தேஜா சட்டமன்ற உறுப்பினரும் பேராக் ஆட்சிக்குழு உறுப்பினராக சந்திரா இங், சிம்பாங் பூலாய் சட்டமன்ற உறுப்பினரான வோங் ஹாய் மாணவர்களுக்கு பரிசுகள் எடுத்து வழங்கினர். 

May be an image of 12 people and headscarf

அதோடு இந்நிகழ்வில் கோப்பெங் ஊராட்சி மன்ற உறுப்பினர் சண்முகம் என்ற பாலு, பள்ளி தலைமையாசிரியர் லூர்த்து மேரி, பள்ளி வாரியத்தலைவர் ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர், பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

- ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset