நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

சிங்கப்பூர் - ஆசியான் - சீனா: மோசடிகளை முறியடிக்கக் கடப்பாடு: ஜோசஃபின் தியோ

பேங்காக்:

சிங்கப்பூர், ஆசியானோடும் சீனா போன்ற பங்காளி நாடுகளோடும் இணைந்து மோசடிகளை முறியடிக்கக் கடப்பாடு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய குற்றங்களைத் தடுக்க அனைத்துலக ஒத்துழைப்பு அவசியம் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) கூறினார்.

தென்கிழக்காசிய நாடுகள் மோசடிகளை எதிர்க்கும் பொறுப்பைத் தங்கள் தோள்களில் சுமக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) சொன்னதாகக் கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து திருமதி தியோவின் கருத்துகள் வந்துள்ளன.

குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு நாடும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்; மோசடிகளை எதிர்க்கும் வழிமுறைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

பேங்காக்கில் நடைபெற்ற ஐந்தாவது ஆசியான் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர்கள் சந்திப்பில் சிங்கப்பூர் அமைச்சர் தியோ பேசினார்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset