நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியப் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சந்திப்பு

புது டெல்லி: 

அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு 5 நாள் வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியா - சிங்கப்பூர் இடையேயான விரிவான ராஜீய உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

செமி கண்டெக்டர் உற்பத்தி, டிஜிட்டல் மயம், திறன் மேம்பாடு, இரு நாடுகளிடையேயான போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொழில்துறை, உள்கட்டமைப்பு, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் சிங்கப்பூர் அதிபர் சண்முகரத்தினம் சந்தித்தது ஆலோசனை மேற்கொண்டார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset