நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக்கில் நிகழ்ந்த பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணையை  போலிஸ் முடித்துள்ளது: ஐஜிபி ரஸாருடின் ஹுசைன்

கோலாலம்பூர்:

சரவாக்கில் உள்ள ஒரு ஒளிபரப்பு நிறுவனம் சம்பந்தப்பட்ட பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை போலிசார் முடித்துள்ளனர்.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.

இந்த விசாரணை அறிக்கை விரைவில் சட்டத்துறை தலைவர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படும்.

இப் பண மோசடி தொடர்பில் கடந்த ஜனவரி 10 முதல் நேற்று வரை ஓர் ஒளிபரப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, முன்னாள் மேயர் உட்பட கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக இன்னும் கண்டறியப்பட்ட வேறு நபர்கள் இருந்தால் அவர்கள் கைது செய்யப்படலாம். ஆனால் அது போலிஸ் விசாரணையைப் பொறுத்தது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset