
செய்திகள் மலேசியா
கிந்தா இந்தியர் சங்கத்தின் பொங்கல் விழாவில் ஐந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பு
ஈப்போ:
பேராக்கில் கால்பந்து விளையாட்டுத்துறையில் பிரசித்தி பெற்ற கிந்தா இந்தியர் சங்கம் (கே.ஐ.ஏ) தங்களின் வருடாந்திர நிகழ்வான பொங்கல் விழாவை இம்மாதம் 26.1.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை மணி 8.00 க்கு நடத்தவுள்ளது என்று சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.தங்கராஜா கூறினார்.
இந்நிகழ்வு கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தின் வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம் முறை இவ்வட்டாரத்திலுள்ள 5 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவர்கள் முதலில் பொங்கல் வைத்தல் போட்டி, கோலப்போட்டி, தமிழர் பாரம்பரிய பண்பாட்டு நடனப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வு தமிழர் கலை பண்பாட்டு அம்சங்களுடன் நடைபெற பாடகர்கள் மற்றும் தமிழர் பண்பாட்டு இசைகளும் இடம்பெறும். நிறைவுவிழாவில் வருகையாளர்களுக்கு மதிய உணவு விருந்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் இந்திய சமூக பிரமுகர்கள், கிந்தா இந்தியர் சங்கத்தினர், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொள்ள அன்போடு கிந்தா இந்தியர் சங்க குடும்பத்தினர் அழைப்பதாக டத்தோ தங்காஜா கூறினார்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 10:42 pm
நவீன உலகிற்கு உகந்த தீர்வுகளை தமிழர் சமூகத்திலிருந்தே உருவாக்க முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
July 3, 2025, 4:58 pm
ரம்லி பர்கர், ஐஸ் உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை ஒத்திவைக்கிறது: அர்மிசான் அலி
July 3, 2025, 4:15 pm
கோத்தா மடானி மேம்பாட்டு திட்டத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை: ஜலிஹா முஸ்தாபா
July 3, 2025, 3:25 pm