நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டிகளில் பெருமைமிகு சாதனை படைத்த மலேசிய அணிக்கு பிரதமர் வாழ்த்து

கோலாலம்பூர்:

தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டிகளில் பெருமைமிகு சாதனை படைத்த மலேசிய அணியை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வாழ்த்தினார்.

தாய்லாந்தில் நடைபெற்ற 2025 சீ விளையாட்டுப் போட்டிகளில் மலேசிய அணி பெருமைமிக்க சாதனைகளைப் படைத்தது.

வட்டார அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதில் ஒருபோதும் தயங்காத விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், குழு அதிகாரிகளின் உயர் ஒழுக்கம், தொடர்ச்சியான தியாகம்,  போராட்ட மனப்பான்மை ஆகியவற்றின் விளைவாக இந்த வெற்றி கிடைத்துள்ளது.

இந்த சாதனை, மற்ற முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்கான தயாரிப்புகளை வலுப்படுத்த ஒரு ஊக்கியாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

இதனால் மலேசியா வட்டார, அனைத்துலக மட்டங்களில் போட்டித்தன்மையுடனும் மரியாதையுடனும் இருக்கும் என்று அவர்  தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset