நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ  நஜிப் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது: நஜிப்பிற்கு வீட்டுக் காவல் இல்லை

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப் துன் ரசாக்கின் வீட்டுக் காவல் கோரிக்கையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் வழக்கில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதற்காக குறைக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க நஜிப் விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.

இந்த விண்ணப்பத்தை உயர் நீதிமன்ற நீதிபதி ஆலிஸ் லோக் இன்று காலை தள்ளுபடி செய்தார்.

16ஆவது  மாட்சிமை தங்கிய மாமன்னரின் அரச ஆணை சட்டத்தின்கீழ் செல்லாது என கண்டறியப்பட்டது.

ஆக இந்த காரணத்தை அடிப்படையாகக் கொண்ட சூழ்நிலையில், கூடுதல் உத்தரவு கருணையின் தனிச்சிறப்பைப் பயன்படுத்தி செய்யப்பட்ட செல்லுபடியாகும் உத்தரவு அல்ல.

அதனால் வீட்டுக் காவல் உத்தரவு செயல்படுத்தப்பட முடியாது.

மலேசியாவில் அத்தகைய வழிமுறைக்கு எந்த சட்டப்பூர்வ ஏற்பாடும் இல்லை என்று நான் கருதுகிறேன் என்று நீதிபதி கூறினார்.

இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை காஜாங் சிறையில் தொடர்ந்து அனுபவிப்பார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset