நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழல் எதிர்ப்பு பேரணி தடையின்றி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: ஹனிபா

கோலாலம்பூர்:

தலைநகரில் நடத்த திட்டமிட்டுள்ள ஊழல் எதிர்ப்பு பேரணி தடையின்றி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

முன்னாள் சட்டத் துறை  துணையமைச்சர் முகமத் ஹனிபா மைடின் இதனை கூறினார்.

ஊழல் எதிர்ப்பு பேரணி வரும் ஜனவரி 25 ஆம் தேதி கோலாலம்பூரில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பேரணி திட்டமிட்டப்படி நடத்தப்பட வேண்டும். இப்பேரணிக்கு எந்த தடையும் வரக்கூடாது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் கடந்த காலங்களில்  பல தெருப் போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.

ஆகையில் இதை அவர்கள் கருத்தில் கொண்டு இப்பேரணி திட்டமிட்டப்படி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதே வேளையில் போலிஸ் துறையினரின் தலையீடு இல்லாமல் மக்கள் கூட்டங்களை நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

எந்தவொரு அமைதியான கூட்டத்தையும் நடத்துவதற்கான மக்களின் உரிமை உறுதி செய்யப்பட்டு அதற்கேற்ப பாதுகாக்கப்படுவதை மடானி அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset