நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் லங்காவியில் நடைபெறவுள்ளது 

லங்காவி: 

ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் கெடா மாநிலத்தின் லங்காவி தீவில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது 

இதற்காக ஆசியானைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் லங்காவி தீவிற்கு வர தொடங்கியுள்ளனர். 

மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு லங்காவி தீவிற்கு வருகை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த AMM அமைச்சர்கள் கூட்டம் லங்காவி அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. 

2025ஆம் ஆண்டு மலேசியா ஆசியானை தலைமையேற்றது முதல் இந்த முதலாவது அமைச்சர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது 

ஆசியான் நாடுகளைச் சேர்ந்த 10 வெளியுறவு அமைச்சர்கள் இந்த இரு நாட்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். 

தீமோர் லெஸ்தே நாட்டின் வெளியுறவு அமைச்சர் BENDITO DOS SANTOS FREITAS இக்கூட்டத்தின் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset