நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

ஆசியான் இலக்கவியல் அமைச்சர்கள் கூட்டம் உறவுகளை வலுப்படுத்துவதை மலேசியா இலக்கு கொண்டுள்ளது: கோபிந்த் சிங்

புத்ராஜெயா:

ஆசியான் இலக்கவியல் அமைச்சர்கள் கூட்டம் உறவுகளை வலுப்படுத்துவதை  மலேசியா இலக்காக கொண்டுள்ளது.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இதனை கூறினார்.

ஐந்தாவது ஆசியான் இலக்கவியல் அமைச்சர்கள் கூட்டம் தாய்லாந்து பேங்காக்கில் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தின் போது முக்கிய விவாதங்கள் செயற்கை நுண்ணறிவு  நிர்வாகம், எல்லை தாண்டிய தனியுரிமை கட்டமைப்புகள், சைபர் பாதுகாப்பு, இலக்கவியல் பொருளாதார கட்டமைப்பு ஒப்பந்தம்  ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

ஆசியானின் இலக்கவியல் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கும்,  செயற்கை நுண்ணறவு உந்துதல் கொண்ட எதிர்காலத்திற்குத் தயாராவதற்கும் அடித்தளம் அமைப்பதற்கு இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானது.

இந்த ஆண்டு மலேசியா ஆசியான் தலைவராகப் பொறுப்பேற்ற போது இந்தக் கூட்டம் நடைபெறுகிறது என்று அமைச்சர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset