நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் குடிபோதையில் ரயில் அல்லது பேருந்தில் ஏற அனுமதி இல்லை; மீறினால் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்: போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் குடிபோதையில் இருப்பவர்கள் அல்லது பயணம் செய்யும் நிலையில் இல்லாதவர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த அனுமதி இல்லை.

குடிபோதையில் மற்ற பயணிகளுக்குத் தொல்லை விளைவிப்போர் உடனடியாகப் பேருந்து அல்லது ரயிலில் இருந்து வெளியேற்றப்படுவர்.

ஒத்துழைக்க மறுத்தால் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்பதைப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட் (Chee Hong Tat) நினைவுறுத்தினார்.

போக்குவரத்து நிறுவனங்கள் அவர்களுக்குக் குற்ற அறிக்கை விடுத்து அபராதமும் விதிக்கலாம் என்றார் அவர்.

கடந்த 3 ஆண்டுகளில், மாதத்துக்குச் சராசரியாக அதுபோன்ற சுமார் 34 சம்பவங்கள் நடந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆனால் அந்தச் சம்பவங்களில் தொடர்புடையவர்களில் பலர் ஒத்துழைப்பு வழங்கியதால் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குடிபோதை அறிகுறிகளைக் கண்டறியவும் குடிபோதையில் உள்ளவர்களைக் கையாளவும் பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 3 ஆண்டுகளில் பொதுப் போக்குவரத்தில் குடிபோதையிலிருந்த பயணிகள் எத்தனை பேர்? அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று உறுப்பினர் ஜெரால்ட் கியாம் (Gerald Giam) கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் சீ எழுத்துபூர்வ பதில் தந்தார்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset