
செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான் தலைமைத்துவ பொறுப்பை ஏற்றதை முன்னிட்டு 29 மக்களை மையமாகக் கொண்ட திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது: டத்தோஶ்ரீ அம்ரான்
புத்ராஜெயா:
ஆசியான் தலைமைத்துவ பொறுப்பை ஏற்றதை முன்னிட்டு 29 மக்களை மையமாகக் கொண்ட திட்டங்கள் மேற்கொள்ள மலேசிய திட்டமிட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அம்ரான் முஹம்மது ஜின் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டு ஆசியான் தலைமைத்துவ பொறுப்பை மலேசியா ஏற்றுள்ளது.
இதன் அடிப்படையில் மக்களை மையமாகக் கொண்ட 29க்கும் மேற்பட்ட திட்டங்களை மேற்கொள்ள மலேசியா திட்டமிட்டுள்ளது.
இந்த முயற்சி, ஆசியானை உள்ளூர் சமூகங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வரும்.
அதே வேளையில், அடிமட்ட சமூகங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆசியான் இளைஞர் மாநாடு, உள்ளூர் தொழில் முனைவோருக்கு மலேசியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கான பிரச்சாரம், டிஜிட்டல் மயமாக்கல், கிராமப்புற பெண்களை மேம்படுத்துவது உட்பட பல திட்டங்கள் அதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2025, 3:32 pm
சீனாவின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக ஆசியான் தொடர்ந்து நிலைத்திருக்கும்
April 6, 2025, 12:56 pm
அமெரிக்கா விதித்திருக்கும் வரிகள் தொடர்பாகக் கூட்டாகப் பதில் சொல்ல ஆசியான் முடிவு
April 5, 2025, 3:14 pm
மனிதாபிமானப் பணிக்காக மியான்மார் பயணத்தை முஹம்மத் ஹசான் தொடங்கினார்
February 26, 2025, 12:22 pm
ஆசியானில் இணையும் திமோர்-லெஸ்டே நாட்டை வரவேற்கிறோம்: பிரதமர் அன்வார்
February 25, 2025, 9:49 pm