நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வியாட்நாம் அதன் அரசாங்க தொலைக்காட்சி ஒளியலை சேவையை நிறுத்தியது 

ஹனோய்: 

வியட்நாம் நாடு அதன் அரசாங்க தொலைக்காட்சி ஒளியலை சேவையை நிறுத்தியது. 

அதிகாரத்துவ சீரமைப்பு நடவடிக்கைக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 20 விழுக்காடு பொது ஆள்பல வேலை சுமையைக் குறைக்கவும் வழிவகை செய்யும் என்று அவர்கள் கருத்துரைத்தனர். 

புதன்கிழமையன்று, VTC வியாட்நாம் அரசு தொலைகாட்சி நிலையம் அதன் தொலைக்காட்சி சேவையை நிறுத்தியது 

VTC தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த 800 பேரின் நிலை இதுவரை என்னவென்று தெரியாமல் உள்ளது 

கடந்த 20 ஆண்டுகளாக வியட்நாம் நாட்டு மக்களுக்கு வழங்கி வந்த சேவையை VTC தொலைக்காட்சி நிறுத்துவதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்தது 

VTCஐ தவிர்த்து வியட்நாம் நாட்டில் VTV தொலைக்காட்சி தான் மக்கள் அதிகமாக பார்க்கக்கூடிய தொலைக்காட்சி சேவையாகும்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset