
செய்திகள் உலகம்
போலி ஜம்ஜம் நீர் விற்பனை: $2.5 மில்லியன் டாலர் லாபம் ஈட்டிய நபர் கைது
அங்காரா:
போலி ஜம்ஜம் தண்ணீரை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், இந்த ஊழல் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளின்படி, மில்லியன் கணக்கான துருக்கிய லிராக்களை குவித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
துருக்கியில் போலி ஜம்ஜம் தண்ணீரை தயாரித்து விற்பனை செய்த இந்த மோசடி நடவடிக்கை, சுமார் 90 மில்லியன் லிரா ($2.5 மில்லியன் டாலர்) வருவாயை ஈட்டியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் மூலம் தினமும் 20 டன் போலி ஜம்ஜம் தண்ணீர் உற்பத்தி செய்யப்பட்டு, ஒரு நாளைக்கு சுமார் 600,000 லிரா ($22,000) சம்பாதித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிலால் என அடையாளம் காணப்பட்ட அந்த சந்தேக நபர், விசாரணையின் போது, இந்த திட்டத்தை சுமார் ஐந்து மாதங்களாக நடத்தி வருவதாகவும், இதுவரை அவர் கிட்டத்தட்ட $2.5 மில்லியன் லாபம் ஈட்டியதாகவும் ஒப்புக்கொண்டார்.
இஸ்தான்புல் உட்பட துருக்கியில் விற்கப்படும் ஜம்சம் தண்ணீரில் பெரும்பாலானவை தெற்கு துருக்கியின் அதனாவில் உள்ள அவரது கிடங்கில் இருந்து வந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
அதிகாரிகள் அந்த குறிப்பிட்ட இடத்தில் சோதனை செய்தனர், சவூதி அரேபியாவிலிருந்து வந்த உண்மையான ஜம்ஜம் தண்ணீர் என்று பெயரிடப்பட்ட போலி லேபிள்களைக் கொண்ட கொள்கலன்களில் அடைக்கப்பட்ட 15 டன் (15,000 லிட்டர்) சாதாரண குழாய் நீர் அங்கு இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
குழாய் நீர்:
உள்ளூர் ஊடகங்களால் வெளியிடப்பட்ட சோதனையின் படங்கள், பெரிய அளவிலான சிறிய தனிப்பட்ட பயன்பாட்டு பாட்டில்கள், வீட்டு உபயோகத்திற்கான பெரிய கொள்கலன்களைக் காட்டின, இவை அனைத்தும் சந்தைகளில் காணப்படுவதைப் போன்ற லேபிள்களுடன் விற்கப்பட்டு வந்தன. பொதுமக்கள் அது ஜம்ஜம் நீர் என்று நம்பி வாங்கி ஏமாந்து வந்துள்ளனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 4:31 pm
சூரியனின் தென் துருவத்தை முதல்முறையாகப் படம் பிடித்து சோலார் ஆர்பிட்டர் சாதனை படைத்தது
June 12, 2025, 1:12 pm
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளம்: 49 பேர் உயிரிழப்பு
June 12, 2025, 9:47 am
போலந்து நெருக்கடியால் லெவன்டோவ்ஸ்கி ராஜினாமா?
June 12, 2025, 9:44 am
இறந்த சடலத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண்
June 12, 2025, 9:42 am
மேசையின் மேல் ஏறி நின்ற ஆசிரியர்: மாணவனின் தலையைப் பலமுறை உதைத்தார்
June 11, 2025, 9:43 pm
உக்ரைன் மீது ரஷியா பயங்கர தாக்குதல்
June 11, 2025, 8:24 pm
ராணுவத்துக்கு பட்ஜெட்டில் 20% கூடுதலாக ஒதுக்கியது பாகிஸ்தான்
June 11, 2025, 11:30 am