நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025ஆம் ஆண்டில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக  10 திட்டங்கள் அறிவிக்கப்படலாம்: டத்தோஸ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

2025ஆம் ஆண்டில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 10 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு  துறையின் துணையமைச்சராக பொறுப்பேற்றது முதல் சமுதாயத்திற்காக 7 திட்டங்களை அறிவித்தேன்.

இத்திட்டங்கள் அனைத்தும் இந்திய சமுதாயத்திற்கு குறிப்பாக தொழில் முனைவர்களுக்கு பெரும் பயனாக இருந்தது.

இந்த 2025ஆம் ஆண்டில் இந்திய சமுதாயத்திற்கான இத்திட்டங்கள் தொடருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

கண்டிப்பாக இத்திட்டங்கள் அனைத்தும் தொடரும். கடந்தாண்டு 7 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது.

இவ்வாண்டும் கிட்டத்தட்ட 10 திட்டங்கள் அமல்படுத்தப்படலாம். திட்டங்கள் அறிவிப்பதுடன் நிதி ஒதுக்குவது முக்கியம் அல்ல. 

அத்திட்டங்கள் அனைத்தும் சமுதாயத்தை சென்றடைய வேண்டும். அது தான் எங்களின் இலக்கு.

ஆகையால் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் முறையாக அமல்படுத்தப்படும்.

சுங்கைபூலோவில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் டத்தோஸ்ரீ ரமணன் இதனை கூறினார்.

இந்த பொங்கல் விழாவில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், துணையமைச்சரின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset