செய்திகள் மலேசியா
முன்னாள் பேரரசரின் கூடுதல் உத்தரவுக்கு எதிரான தடை உத்தரவுக்கு அசாலினா எதிர்ப்பு
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தமக்கு மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டில் கழிக்க அனுமதிக்க வேண்டும் என்ற முன்னாள் பேரரசரின் கூடுதல் உத்தரவு தொடர்பான வழக்கைப் பற்றி பொதுமக்கள், ஊடகங்கள் உட்பட பிற தரப்புகள் பேசுவதைத் தடுக்க உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவைக் கோரியதற்கு பிரதமர் துறையின் சட்ட மற்றும் கழகச் சீர்த்திருத்த அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சையத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தப் பிரச்சனை குறித்து மீண்டும் விவாதிக்கப்படும் என்றார் அவர்.
இது போன்ற தடை உத்தரவைப் பிறப்பிக்கக்கூடாது என்று நான் சொல்ல முடியும். ஏனெனில் முதலில் அது ஒரு பொது ஆவணமாக மாறும்.
இரண்டாவதாக, நாடாளுமன்றம் அடுத்த மாதம் கூடும், இவை அனைத்தும் நிச்சயமாக மீண்டும் எழுப்பப்படும் என்று இன்று இங்கு 2025 ஆம் ஆண்டுக்கான அரசியல் நிதி சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்த பிறகு அவர் கூறினார்.
இருப்பினும்,சட்டத்துறை அலுவலகம் விண்ணப்பம் செய்வதற்கு சில சட்டப்பூர்வக் காரணங்களைக் கொண்டிருக்கலாம் என்று அசாலினா கூறினார்.
விண்ணப்பம் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்போது, முடிவெடுக்கும் பொறுப்பை நீதிமன்றத்திடம் விட்டுவிடுவதோடு அந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தமக்கு மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டில் கழிக்க அனுமதிக்க வேண்டும் என்ற முன்னாள் பேரரசரின் கூடுதல் உத்தரவு தொடர்பான வழக்கைப் பற்றி பொதுமக்கள், ஊடகங்கள் உட்பட பிற தரப்புகள் பேசுவதைத் தடுக்க உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவை அரசாங்கம் கோரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு நுணுக்கமான விஷயங்களைக் கொண்டுள்ளது.
மேலும், விவாதங்கள் வழக்கின் நேர்மையைப் பாதிக்கக்கூடும் என்பதால் விசாரணை முடிவடையும் வரை யாரும் இதைப் பற்றி பேசக்கூடாது என்று தடை உத்தரவை கோருகிறோம் என மூத்த அரசு வழக்கறிஞர் ஷம்சுல் பொல்ஹசான் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 14, 2025, 7:07 pm
கைரி மீதான விசாரணை ஆவணங்கள் விரைவில் பூர்த்தியாகும்: ஐஜிபி
January 14, 2025, 6:35 pm
அமைச்சரின் மகன் அண்டை நாட்டில் திருமணம் செய்து கொண்டது நண்பர்களுக்கு கூட தெரியாது: ஐஜிபி
January 14, 2025, 6:16 pm
வீட்டுக் காவல் விவகாரத்தில் நஜிப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும்: கிம்மா தலைவர் செய்யது இப்ராஹிம்
January 14, 2025, 3:39 pm
7 முக்கிய மருத்துவமனைகளில் இணைய வசதியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது: தியோ நீ சீங்
January 14, 2025, 2:38 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் மஇகாவின் பொங்கல் விழா: விமரிசையாக நடைபெற்றது
January 14, 2025, 2:37 pm
2025ஆம் ஆண்டில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 10 திட்டங்கள் அறிவிக்கப்படலாம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 14, 2025, 2:01 pm