நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

7 முக்கிய மருத்துவமனைகளில் இணைய வசதியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது: தியோ நீ சீங்

பெரா: 

நாடு முழுவதும் உள்ள ஏழு முக்கிய மருத்துவமனைகளில் தகவல் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து தகவல் தொடர்பு அமைச்சகம் இணைய வசதியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல் தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார். 

பல மருத்துவமனைகளில் இணையம் மற்றும் தகவல் தொடர்பு சிக்கல்களைச் சுகாதார அமைச்சகம் எடுத்துரைத்துள்ள நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நெகிரி செம்பிலானில் ரெம்பாவ் மருத்துவமனை, மலாக்காவில் தானா மேரா மருத்துவமனையும் அலோர் காஜா மருத்துவமனையும், பினாங்கு மருத்துவமனை,சைபர் ஜெயா மருத்துவமனை, கோலா திரெங்கானுவில் துவாங்கு நூர் ஜாஹிரா மருத்துவமனை மற்றும் கோலாலம்பூர் மருத்துவமனை ஆகியவற்றில் இணையச் சேவை மேம்படுத்தப்படும் என்று தியோ கூறினார். 

மலேசியத் தகவல் தொடர்பு பல்லூட ஆணையம், பொதுமக்களுக்கு சிறந்த சுகாதார நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக மருத்துவமனைகள், சுகாதார கிளினிக்குகள் மற்றும் மாவட்டச் சுகாதார மையங்களில் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் என்று தியோ கூறினார்.

நாடு முழுவதும் உள்ள பிற மருத்துவமனைகளில் இணைப்பு சிக்கல்களை நிவர்த்தி செய்வது கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆதரிக்க சிறந்த இணைய அணுகல் தேவைப்படும் கிராமப்புற பள்ளிகள் மற்றும் பழங்குடி மக்கள் குடியிருப்புகளை அடையாளம் காண தகவல் தொடர்பு அமைச்சகம் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset