நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சரின் மகன் அண்டை நாட்டில் திருமணம் செய்து கொண்டது நண்பர்களுக்கு கூட தெரியாது: ஐஜிபி

கோலாலம்பூர்:

அமைச்சரின் மகன் அண்டை நாட்டில் திருமணம் செய்து கொண்டது நண்பர்களுக்கு கூட தெரியாது. தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.

தனது காதலியை கருக்கலைப்பு செய்ய மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு  அமைச்சரின் மகன், கடந்த ஆண்டு அந்தப் பெண்ணை ரகசியமாக மணந்தார்.

அத் தம்பதியரின் திருமணச் சான்றிதழ் செல்லுபடியாகும் என்பதை போலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த திருமணத்தை அந்த ஜோடி உண்மையில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களது சொந்த நண்பர்களுக்கே இது பற்றி தெரியாது என்றும் அவர் கூறினார்.

இதுபோன்ற பிரச்சினைகள் வரும் போது கூட அவர்களுடைய நண்பர்களுக்குக் கூடத் தெரியாது.

தங்கள் குடும்பத்தினர் புண்படுவார்கள் என்ற பயத்தில் அதைப் பற்றிப் பேச அவர்கள் விரும்புவதில்லை என்று அவர் கூறினார்.

முன்னதாக, உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில், விசாரிக்கப்படும் நபர் தனது மகன் என்று சூசகமாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset