நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில்  மஇகாவின் பொங்கல் விழா: விமரிசையாக நடைபெற்றது

கோலாலம்பூர்:

மஇகாவின் பொங்கல் விழா கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் விமரிசையாக நடைபெற்றது.

மலேசிய வாழ் தமிழர்கள் இன்று பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இதன் அடிப்படையில் மஇகாவின் பொங்கல் விழா தலைமையகத்தின் அருகில் உள்ள ஆலயத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மூன்று பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு பின் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன், கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இதனிடையே 2025 பொங்கல் திருநாள் மலேசிய இந்திய சமுதாயத்தின் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாக அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்திய சமுதாய மக்கள் ஈடுபடும் அனைத்து காரியங்களிலும் வெற்றியடை வேண்டும். 

அதேவேளை, நம் சமுதாயத்திற்கு இன்றைய அவசியத் தேவை ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் என்பதால், நாம் அனைவரும் ஒரு குடையின்கீழ் ஒருமித்து செயல்படுவதில் அக்கறை கொள்ள வேண்டும்.

அரசியல் ரிதியாக, மலேசிய இந்தியர்கள் வெவ்வேறு பாதையில் பயணித்தாலும் சமூக அளவில் நாம் ஒற்றுமையுடன் திகழ்ந்தால்தான், சமுதாயம் பயனடையும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset