நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய முஸ்லிம்களின் பூமிபுத்ரா அந்தஸ்துக்கு உரிய பதில் இல்லை என்றால் புத்ராஜெயாவில் மாபெரும் கூட்டமாக திரள்வோம்: டத்தோஸ்ரீ செய்யது இப்ராஹிம்

கோலாலம்பூர்:

இந்திய முஸ்லிம்களின் பூமிபுத்ரா அந்தஸ்துக்கு உரிய பதில் இல்லை என்றால் புத்ராஜெயாவில் மாபெரும் கூட்டமாக திரள்வோம்.

கிம்மாவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ செய்யது இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு பூமிபுத்ரா அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பது நமது அரசியலமைப்பு சட்டத்திலேயே உள்ளது.

ஆனால் அந்த உரிமை இன்று வரை எங்கள் சமுதாய மக்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது.

இதனால் கல்வி முதல் எல்லா விதத்திலும் இந்திய முஸ்லிம் மக்கள் பல்வேறான சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்பிரச்சினைக்கு உரிய பதில் வழங்க  வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி, உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் ஆகியோருக்கு கிம்மா கடிதம் எழுதியது.

ஆனால் இக்கடிதத்திற்கு எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் ஒரு கடிதத்தை கிம்மா எழுதவுள்ளது.

அதற்கும் பதில் கிடைக்கவில்லை என்றால் இந்திய முஸ்லிம் சமுதாயம் புத்ராஜெயாவில் மிகப் பெரிய கூட்டமாக திரளவுள்ளனர்.

பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது பெருநாளுக்கு பின் இக் கூட்டம் நடத்தப்படும்.

இக்கூட்டத்தின் போது பிரதமருக்கு மகஜரும்வழங்கப்படும் என்று கிம்மா மத்திய செயலவை கூட்டத்திற்கு பின் டத்தோஸ்ரீ  செய்யத் இப்ராஹிம் இதனை கூறினார்.

இன்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

குறிப்பாக அம்னோ உச்சமன்றத்தில் கிம்மாவுக்கும் இடம் வழங்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset